மந்திரம் அல்ல இது தந்திரம்
மந்திரம் :
ஒரு பலூனை எடுத்து கொள்ளுங்கள் . பின்னர் அதை ஊதி அதன் வாயை கட்டி
கொள்ளுங்கள் . ஒரு ஊசியால் பலூனை ஒரு இடத்தில குத்துங்கள். இப்போது
உங்களுக்கு தெரிந்த வரையில் பலூன் உடைந்து விடும் அல்லவா. ஆனால் பலூன்
உடையாது. நீங்கள் தந்திரம் கொண்டு மந்திரம் செய்யும் போது.
தந்திரம்:
தேவையான பொருள்
முதலில் பலூனை நன்றாக ஊதி அதன் வாயை கட்டி கொள்ளுங்கள். பின்னர் பலூனின்
மேல் ஒரு செல்லோடேப் கொண்டு கொஞ்சம் இடத்தில் ஒட்டி விடுங்கள். நீங்கள்
செல்லோடேப் ஒட்டிய விஷயம் பிறருக்கு தெரிய வேண்டாம் . இது
பார்பதற்கு செல்லோடேப் ஒட்டியது போல் தெரியாது. . இப்போது உங்கள்
நண்பரிடம் பலூனை காட்டி விட்டு அவருடைய முன்பே பலூனில் ஊசியால் குத்துங்கள்
. அனால் நீங்கள் குத்துவது செல்லோடேப் ஒட்டிய இடமாக இருக்க வேண்டும்.
உங்கள் நண்பருக்கு அது தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. நீங்கள் பலூனில் ஊசியால்
குத்திய போதும் பலூன் உடையாமல் இருப்பது கண்டு உங்கள் நண்பர் வியந்து
போவார்.
நீங்கள் பலூனில் ஊசியால் குத்திய இடம் செல்லோடேப் ஒட்டிய இடமாக இருப்பதால் ,
பலூனை செல்லோடேப் உடையாமல் பார்த்து கொள்ளும். நீங்கள் ஊசியை பலூனில்
இருந்து எடுக்கும் போது காற்று குறைய ஆரம்பிக்கும் . அப்போதும் பலூன்
உடையாது .
செய்து மகிழுங்கள் . நண்பரிடம் வியப்பை பாருங்கள் .
No comments:
Post a Comment