ALIEN SPECIES




உயிர் எவ்வாறு செயல்படுகிறது [1] என்ற தற்போதைய புரிதலை மாற்றிஅமைக்கக்கூடிய ஒரு புதிய வகை பாக்டீரியாகலிபோர்னியாவிலுள்ளமோனோ ஏரியில் (Mono Lake) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுபூமியில் வாழும்எல்லா உயிர்களும் கார்பன்ஹைட்ரஜன்ஆக்சிஜன்நைட்ரஜன்சல்பர்மற்றும் பாஸ்பர் ஆகிய ஆறு அடிப்படை மூலகங்களையும்ஏனையமூலகங்களின் அடிப்படை பண்புகளையும்முக்கியமாக செல்களில்நடைபெறும் குறிப்பிட்ட இரசாயன செயல்முறைகளுக்கு உதவக்கூடியஉலோகங்களின் அடிப்படை பண்புகளையும்ஒருங்கிணைத்துக்கொண்டிருப்பதாக கருதப்படுகிறது.  


A microscopic image of GFAJ-1 grown on arsenic (courtesy NASA).
புதிதாக கண்டறியப்பட்டிருக்கும் GFAJ-1 எனும் இந்த பாக்டீரியா, Gammaproteobacteria என்றழைக்கப்படும் ஒரு பொதுவான பாக்டீரியா குழுவைச்சேர்ந்ததாகும்செல்களின் செயல்முறைகளில் இது பாஸ்பரஸிற்குப் பதிலாகஆர்சனிக்கைப் (arsenic) பயன்படுத்துவதாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.ஆர்சனிக் இரசாயனரீதியாக பாஸ்பரஸைப் போன்றது தான் என்றாலும்அதுஎல்லா உயிர்களுக்கும் பொதுவாக கொடிய நச்சுத்தன்மையை உடையதாகஇருக்கிறது
பாஸ்பரஸிற்குப் பதிலாக ஆர்சனிக்கைப் பயன்படுத்தும் ஒரு பாக்டீரியாவைக்கண்டறிய முடியும் என்ற கருத்துநான்கு ஆண்டுகளுக்கு முன்னர்,அரிஜோனா மாகாண பல்கலைக்கழகத்தில் அப்போது முதுகலை-முனைவர்பட்ட ஆராய்ச்சியாளராக இருந்த பெலிசா வோலி-சைமனால் (Felisa Wolfe-Simon) முன்வைக்கப்பட்டதுஅவருடைய ஆய்வுப்புனைவுகோளை (hypothesis)ஆதரிக்கசர்வதேச அளவில் புகழ்பெற்ற விஞ்ஞானி பால் டேவிஸைஇணங்கச் செய்த பெலிசாகலிபோர்னியாவிலுள்ள அமெரிக்கஜியோலாஜிக்கல் ஆய்வு கழகத்தில் ஒரு தற்காலிக பதவியையும் பெற்றார்.நாசாவின் நிதியுதவியுடன்மோனோ ஏரியின் சேற்றை சலித்தெடுக்க,ஆர்சனிக் நுண்-உயிரியியலில் (microbiology) ஒரு சர்வதேச நிபுணரானரோனால்ட் ஓரெம்லாந்துடன் இணைந்து பணியாற்றினார்.
டேவிஸ் பிபிசி-யிடம் கூறியதாவது: “உயிர்கள் பூமியில் மட்டுமேசிறைபட்டிருக்கும் ஓர் எதிர்பாராத விபத்தாக உருவான உயிரிகளா அல்லதுஅடிப்படையிலேயே உயிர்களுக்கு உகந்த ஒரு பிரபஞ்சத்தில்பூமியைப்போன்ற சூழ்நிலைகள் இருக்கும் இடங்களில் எல்லாம் உயிர்கள் தோன்றும்என்றஇயற்கையின் ஒரு பாகமாக இருக்கிறதா என்பது நமக்குத் தெரியாது.”டேவிஸைப் பொறுத்தமட்டில் இரண்டாவதாக குறிப்பிடப்பட்டதற்கு எந்தஆதாரமும் இல்லைஆனால் அவர் தொடர்ந்து கூறுகையில்,“ஆனால்இரண்டாவது குறிப்பிட்டதைப் போன்று இருக்கிறதென்றால்பல பூமிகளில்உயிர்கள் தோன்றியிருக்க வேண்டும்ஆக நம்மைச் சுற்றிலும் ஒரு 'புரியாதஉயிர்மண்டலம்நிலவுவதைப் போலுள்ளதுஅத்துடன் அது மிகவும்குறிப்பிடத்தக்க ஒன்றாக தெரியவில்லை என்பதால் நாம் கவனிக்காமலேயேவிட்டுவிட்டோம்・ என்றார்


உயிர்களைக் குறித்து நாம் அறிந்த வரையில்தேவையில்லா ஏனையமூலகங்களை விடுத்துகுறிப்பிட்ட இரசாயன மூலகங்கள் அதற்குத்தேவைப்படுகிறதுஆனால் அதுமட்டும் தான் ஒரே வழியாக இருக்கிறதா?உயிர்கள் எவ்வாறு வேறுபட்டு இருக்கின்றன?” என்று தெரிவித்த அன்பர்,தொடர்ந்து கூறுகையில், 'மூலகங்களை ஆராய வேண்டும்என்பது பிறகிரகங்களில் உயிர்கள் வாழ்கின்றனவா என்ற தேடலுக்கு உதவும் வழிகாட்டும்நெறிமுறைகளில் ஒன்றாகவும்நம்முடைய விண்-உயிரியியல் திட்டத்தில்ஒன்றாகவும் இருக்கிறதுநாம் எந்த மூலகத்தைத் தொடர்ந்து ஆழமாகஆராய வேண்டும் என்பதைநாம் உறுதியோடு முடிவு செய்யவேண்டியதிருக்கிறது என்பதை பெலிசாவின் ஆய்வு நமக்குக்கற்றுத்தருகிறதுஎன்றார்.
“GFAJ-1இன் வளர்ச்சி உள்ளெடுக்கப்படும் ஆர்சனிக்கின் அளவைப்பொறுத்திருக்கிறதுநியூக்ளிக் அமிலம்புரோட்டீன்கள் மற்றும்மொடாபோலைட்கள் (metabolites) உட்பட உயிர்-வேதியியல்மூலக்கூறுகளுக்குள் (biochemical molecules) அது வயப்படுகிறது,” என்பதைஎடுத்துக்காட்டும் விரிவான ஆய்வு முடிவுகளை Science இதழ் அளிக்கிறது.

ஹவாயில் உள்ள கெக் ஆய்வுக்கூடத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புவேறுஇடங்களிலும் உயிர்கள் வாழ்கின்றன என்பதற்கு மிகவும் நம்பத்தகுந்தஆதாரமாக இருக்கிறதுமுன்னர் கருதப்பட்டதையும் விட சிறியசெந்நட்சத்திரங்களின் (red dwarf) எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகஅந்த ஆய்வகம் கண்டறிந்தது[3]. மதிப்பீட்டில்பிரபஞ்சத்திலுள்ளநட்சத்திரங்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு    அதிகமாகி உள்ளது.குறிப்பாக செந்நட்சத்திரங்களின் பெரும் எண்ணிக்கைவேறு கிரகங்களும்உயிர்களைக் கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆதரிக்கின்றன.சூரியனோடு ஒப்பிடுகையில் சிறியதாகவும்மங்கலாகவும் இருக்கும் மூன்றுநட்சத்திரங்களைத் தொலைநோக்கியால் கண்டறிவதே சிரமமாக உள்ளதுபலபில்லியன் ஆண்டுகளாக இருந்து வரும் அவைஅவற்றைச் சுற்றிவரும்கிரகங்களில் உயிர்கள் தோன்றுவதற்கு போதிய காலத்தைஅளித்திருக்கின்றனபூமியின் வகையைச் சேர்ந்தசமீபத்தில் கண்டறியப்பட்டGliese 581 என்றழைக்கப்படும்வேறு சூரிய மண்டலத்தில் இருக்கும் ஒருகிரகம்ஒரு செந்நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.


இதுபோன்ற கண்டுபிடிப்புகள், “வேற்றுகிரகத்திலும்உயிர்கள் வாழ்கின்றனஎன்ற கருத்திற்கு ஆதரவாக தற்போது "சமநிலைமையை"மாற்றியிருக்கின்றனபுத்திசாலித்தனமான உயிர்களோடு ஒப்பிடுகையில்நுண்ணுயிரிகள் சற்றே மந்தமாக காணப்படுகின்றன என்பது உண்மையே.ஆனால் அவற்றிற்குப் பரிணாமங்கள் பின்னர் ஏற்படக்கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment