SCIENCE

நிலா  நிலவின் குறியீடு
இரவில் முழு நிலவின் தோற்றம். It is patterned with a mix of light-tone regions and darker, irregular blotches, and scattered with varying sizes of impact craters, circles surrounded by out-thrown rays of bright ejecta.
புவியின் அரைக்கோளத்திலிருந்து காணும் முழு நிலவின் தோற்றம்
தகுதி நிலை
பெயரடை நிலவு
சிறும வீச்சு 363,104 km (0.0024 AU)
பெரும வீச்சு 405,696 km (0.0027 AU)
அரைப்பேரச்சு 384,399 km (0.002 57 AU)
சராசரி சுற்றுப்பாதை வேகம் 1.022 km/s
சாய்வுக் கோணம் 5.145° to the ecliptic
(between 18.29° and 28.58° to Earth's equator)
நெடுவரை இறங்கு கணு 18.6 ஆண்டு சுழற்சிக்கு ஒன்று என குறைகின்றது
இறங்கு கணு சிறும வீச்சுக் கோணம் 8.85 சுழற்சிக்கு ஒன்றென அதிகரிக்கின்றது
இயற்பியல் பண்புகள்
சராசரி ஆரம் 1,737.10 km  (0.273 Earths)
நடுவரை ஆரம் 1,738.14 km (0.273 Earths)
துருவ ஆரம் 1,735.97 km  (0.273 Earths)
சுற்றளவு 10,921 km (equatorial)
நீள்கோள மேற்பரப்பளவு 3.793 × 107 km2  (0.074 Earths)
கனஅளவு 2.1958 × 1010 km3  (0.020 Earths)
நிறை 7.3477 × 1022 kg  (0.0123 Earths)
சராசரி அடர்த்தி 3.3464 g/cm3
நடுவரை நில ஈர்ப்பு 1.622 m/s2 (0.165 4 g)
விடுபடு திசைவேகம் 2.38 km/s
உடு சுழற்சிக் காலம் 27.321582 d (synchronous)
நடுவரை சுழற்சி திசைவேகம் 4.627 m/s
கவிழ்ப்பச்சு 1.5424° (to ecliptic)
6.687° (to orbit plane)
எதிரொளிதிறன் 0.136
மேற்பரப்பு வெப்பம்
   நிலநடுக்கோடு
   85°N
குறை நடு மிகை
100 K 220 K 390 K
70 K 130 K 230 K
கோணவிட்டம் 29.3 to 34.1 arcminutes
வளிமண்டலம்
மேற்பரப்பு அழுத்தம் 10−7 Pa (day)
10−10 Pa (night)
பொதிவு Ar 20%, He 25%, Na, K, H 23%, Ne 25%






நிலா, நிலவு, அம்புலி, சந்திரன் என்று் பலவாறு கூறப்படும் இக்கோளம் வானிலே பூமியைச் சுற்றி வருகின்றது. இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம். இது பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள். இது பூமியைச் சுற்றி வர சராசரி 27.32 நாட்கள் ஆகின்றது. இந்த நிலா பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். பூமிக்கும் நிலாவுக்கும் சராசரி தொலைவு 384, 403 கி.மீ.


கலைகள் என்பது நிலாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவாகத் தெரியும் தனித்தனி நிலைகளைக் குறிப்பன. இதனைப் பிறை என்று சொல்வது பெருவழக்கு. முதல் நாள் நிலாவே தென்படாது. இரவு மிக இருட்டாக இருக்கும். இதனை அமாவாசை என்றும் உவா நாள் என்றும் அழைப்பர். பிறகு ஒவ்வொரு நாளும் சிறிகச் சிறுக நிலா (வெளிச்சம் தெரியும் பகுதி) பெரிதாகிகொண்டே வரும், இவைகளை இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்றும் இரண்டாங்கலை, மூன்றங்கலை என்றும் நாட்களைச் சொல்வார்கள். பின்னர் சுமார் 14 நாட்கள் கழித்து ஒரு நாள் முழு நிலா பெரிதாய் வட்ட வடிமாய்த் தெரியும். இதனை முழு நிலா நாள் என்றும் பௌர்ணமி நாள் என்றும் சொல்வர். பிறகு அடுத்த சில நாட்கள் நிலா சிறுக சிறுக தேய்ந்து கொண்டே போய், மீண்டும் உவா நாளுக்கான நிலைக்கே திரும்பி விடும். முதலில் முழுநிலா நாள் வரை வளர்ந்து வருவதை வளர்பிறை என்றும், அடுத்த சுமார் 14 நாட்களைத் தேய்பிறை என்றும் அழைப்பர். நிலா நம் பூமியைச் சுற்றி வருகையிலே எப்படி கதிரொளி நிலாக் கோளத்தின் மீது பட்டு புமியில் தெரிகிறது என்பதை கீழே உள்ள படம் விளக்குகிறது.


புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் (escape speed) அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.


ஆனால், நிலவின் ஈர்ப்பு குறைவாக இருப்பதால், அதிலுள்ள பொருள்களின் விடுபடு வேகமும் குறைவு; மேலும் நிலவின் பரப்பு வெப்பநிலை அதிகம் ஆதலால், அங்குள்ள மூலக்கூறுகள் விடுபட்டுச் சென்று விடும். எனவே தான் நிலவில் காற்று இல்லை. நிலவோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்பு விசை சிறிது அதிகம். பூமியின் ஈர்ப்பு விசையில் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே சிறிதளவு காற்று உள்ளது. வியாழன் கோளின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அதன் மீது மோதுவது உண்டு.






No comments:

Post a Comment